செங்கோட்டை நீதிமன்றத்தில் குடியரசு தின விழா

செங்கோட்டை நீதிமன்றத்தில் குடியரசு தின விழா நடந்தது.

Update: 2023-01-28 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார். வழக்கறிஞா்கள் சங்க செயலாளா் அருண், மூத்த வழக்கறிஞா்கள் சுடர் முத்தையா, ஆசாத், அரசு உரிமையியல் நீதித்துறை வழக்கறிஞா் முத்துக்குமாரசாமி, இணைச்செயலாளா் கார்த்திகை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நீதிபதி சுனில்ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் பொன்னுத்துரை, நித்யானந்தம், பாண்டி, நல்லையா, சிராஜ், சிவசுந்தரவேலன், தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வழக்கறிஞா் சிதம்பரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்