குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-28 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பக்மிதா தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் கலந்துகொண்டு கொடியேற்றி ஏற்றி வைத்தார். இதில் ஷிபா சாரிட்டேபிள் டிரஸ்ட் தலைவரும், 1-வது வார்டு கவுன்சிலருமான முகமது ஷெரீப், முன்னாள் கவுன்சிலர் சுன்னா ஷெரீப், நூருல்லா, இளைஞர் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் ஷேக் ஆதம், மாவட்ட துணைத்தலைவர் அசன் ராஜா, நகர பொருளாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் ரபீக், சல்மான், ஆசிப், ஆசிரிய-ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு ,புத்தகங்கள், பரிசு பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்