5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2022-12-20 19:19 GMT

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த 5 பேர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர்களின் உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்ததை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்