கெங்கையம்மன் திருவிழாவில் சிரசு கீழே விழுந்ததால் பரிகார பூஜை

கெங்கையம்மன் திருவிழாவில் சிரசு கீழே விழுந்ததால் பரிகார பூஜை செய்யப்பட்டது.

Update: 2023-05-18 16:47 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கடந்த 15-ந் தேதி காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடியாத்தம் காந்தி ரோடு வழியாக அம்மன் சிரசு வரும்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வேகமாக கொண்டு செல்லும்போது அம்மன் சிரசு பின்பக்கமாக கீழே தரையில் விழுந்தது. சுதாரித்துக் கொண்ட சிரசு தூக்குபவர்கள் சிரசை மீண்டும் தலையின் மீது வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

அம்மன் சிரசு தரையில் விழும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. இது போன்ற சம்பவம் இதுவரை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்காக பரிகார பூஜை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் ெகங்கையம்மன் கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. இந்த பரிகார பூஜையில் கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகத்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன், இந்து முன்னணியினர் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்