வாய்மேட்டில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வாய்மேட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

Update: 2022-09-06 17:31 GMT

வாய்மேடு:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வாய்மேட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

குடிநீர் குழாயில் உடைப்பு

வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் இந்த குழாயில் இருந்து நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வந்தது. இதன் காரணமாக அனைத்து ஊராட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். வாய்மேடு கடைத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் வங்கி, அரசு பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குழாய் உடைந்து குடிநீர் வெளியானதால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

சரி செய்யப்பட்டது

குழாய் உடைந்து குடிநீர் பீய்ச்சிக்கொண்டு அடித்தால் அந்த வழியாக வாகனங்களில் செல்லபவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்தனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்