மேலச்செவலில் பழுதடைந்த பாலம் சீரமைப்பு
மேலச்செவலில் பழுதடைந்த பாலம் சீரமைக்கப்பட்டது.;
சேரன்மாதேவி:
மேலச்செவல் பேரூராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் இருந்து கீழச்செவல் செல்லும் முக்கிய பாதையில் உள்ள பாலம் சிதிலமடைந்து இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி உடனே நேரில் சென்று பார்வையிட்டு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்த பாலம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.