சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணி

சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணி

Update: 2023-03-27 18:45 GMT

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் ஒவ்வொரு சாலைக்கும் இடையில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிகள், கிணத்துக்கடவு பகுதியில் வாகனங்கள் அவ்வப்போது கட்டுப்பாட்டை இழந்து ேமாதும்போது சேதமடைந்து வருகின்றன. சமீபத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற 4 வாகனங்கள் கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. அந்த வாகனங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் மீதும் மோதியதால், அவை பலத்த சேதம் அடைந்தன. இதையடுத்து சேதமடைந்த அந்த தடுப்பு கம்பிகளை அகற்றிவிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தடுப்பு கம்பிகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, அதிக வேகத்தில் வரும்போது வாகனங்கள் கட்டுக்கடங்காமல் சாலையோர தடுப்பில் மோதி விடுகின்றன. இதனை தடுக்க வாகன ஓட்டிகள் நிதானத்துடன் வர வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்