மலைவாழ் மக்கள் குடியிருக்கும் வனப்பகுதியில் பழுதடைந்த சோலார் விளக்குகள் சீரமைக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மலைவாழ் மக்கள் குடியிருக்கும் வனப்பகுதியில் பழுதடைந்த சோலார் விளக்குகள் சீரமைக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-23 12:06 GMT

தளி

மலைவாழ் மக்கள் குடியிருக்கும் வனப்பகுதியில் பழுதடைந்த சோலார் விளக்குகள் சீரமைக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மலை மக்கள் குடியிருப்பு

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டு மழை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, மேல்குருமலை, கருமுட்டி, முள்ளுப்பட்டி, பூச்சகொட்டாம்பாறை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். மலைவாழ் மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சார்பில் இணைந்து செய்து தரப்படுகிறது. ஆனாலும் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் இன்றளவிலும் முழுமையாக பூர்த்தி அடையவில்லை.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

சோலாளர் விளக்குகள்

உயிரை பணயம் வைத்து அடர்ந்த வனப்பகுதியில் வாழ்க்கை நடத்தி வருகின்ற எங்களுக்கு எந்த ஒரு உதவியும் எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றையும் போராடிப் பெற வேண்டிய சூழல் உள்ளது.அதில் குடியிருப்புகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொருப்பாறு குடியிருப்பில் சோலார் விளக்குகள் அமைத்து தரப்பட்டது. அதில் குடியிருப்பின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள விளக்கு ஒன்று பழுது அடைந்து விட்டது.இதனால் பாதை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க இயலவில்லை.அதை சீரமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பொருப்பாறு வனப்பகுதியில் பழுதடைந்த சோலார் மின் விளக்கை சீரமைப்பு தர வேண்டும்.மேலும் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மோட்டார், சோலார் விளக்குகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட காலத்தில் பராமரிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் அவை பழுதடையாமல் தடுக்கப்படுவதுடன் ஆயுட்காலமும் அதிகரித்து எங்களுக்கு நிலைத்து நின்று பயன் அளிக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

-----------

2 காலம்

பொருப்பாறு குடியிருப்பில் சேதம் அடைந்துள்ள சோலார் விளக்கை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்