ரேணுகாம்பாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சாத்தபூண்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-06-09 18:33 GMT

சேத்துப்பட்டு

தேசூர் அருகே சாத்தபூண்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவை முன்னிட்டு கோவில் முன்பு பெரிய பந்தல் அமைத்து அதில் 3 யாக குண்டம் மற்றும் 208 கலசம் வைத்து கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தம்பதிகள் பூஜை, கோ பூஜை நடந்தது.

பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர்கலசத்துடன், கோவிலை மூன்று முறை வலம் வந்து கோவில் விமானத்தில் உள்ள கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து மூலவர் ரேணுகாம்பாள் அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்குமார், ஜோதி, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணிவேந்தன், மாவட்ட அவைத்தலைவர் சீதாபதி, ஒன்றிய செயலாளர் ராதாமற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

கானா மோனிஷாதினேஷ் குழுவினரால் கச்சேரி நடந்தது தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது.

மகா கும்பாபிஷேக விழாவை ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா வேங்கடரத்தினம், துணைத்தலைவர் விமலா ராஜேஸ்வரி கண்ணதாசன், முன்னாள் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், விழாக்குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்