அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.41½ லட்சத்தில் புனரமைப்பு பணிகள்

பொன்னை அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.41½ லட்சத்தில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-26 17:44 GMT

பொன்னை

பொன்னை அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.41½ லட்சத்தில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

காட்பாடி தாலுகா பொன்னை கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அனந்த பத்மநாப சுவாமி கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலை அரசு சார்பில் ரூ.41.50 லட்சத்தில் புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனந்த பத்மநாபசுவாமி கோவில் புனரமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட இணை இயக்குனர் ரமணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அறங்காவல குழு தலைவர் அசோகன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன். காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக செய்தியார்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறிதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்த ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது.

தமிழகத்திற்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது கர்நாடக அரசிடம் தண்ணீர் விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டு வருகிறது. அதை நடைமுறைப்படுத்துவது காவேரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும்.

ஆனால் காவேரி மேலாண்மை ஆணையம் அதை செய்யவில்லை என்பதுதான் தமிழக அரசின் குற்றச்சாட்டு.

அந்தக் குற்றச்சாட்டுக்குத் தான் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளோம்.

இது தொடர்பாக மேலும் நீதிமன்றத்தை நாடுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

=========

Tags:    

மேலும் செய்திகள்