திருமக்கோட்டையில், பயணிகள் நிழலகம் புனரமைப்பு

திருமக்கோட்டையில், பயணிகள் நிழலகம் புனரமைக்கப்பட்டது.

Update: 2023-04-18 19:00 GMT

திருமக்கோட்டை கடைவீதியில் ஊராட்சி அலுவலகம் எதிரில் பயணிகள் நிழலகம் ஒன்று மிகவும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சேதம் அடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பயணிகள் நிழலகம் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், புனரமைத்த ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்