காமராஜர் தங்கி இருந்த இடத்தை சீரமைக்கும் பணி

ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் தங்கி இருந்த இடத்தை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

Update: 2022-07-30 18:20 GMT

ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் தங்கி இருந்த இடத்தை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

காமராஜர் தங்கிய இடம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்ட காலத்தில் இதன் இயக்க தலைவராக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் அறிவிக்கப்பட்டு,

மும்பையிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் ஆங்கிலேயர்கள் கைது செய்வார்கள் என அறிந்து, ஆங்கிலேயர்களின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, ராணிப்பேட்டைக்கு வந்த காமராஜருக்கு ராணிப்பேட்டையில் உள்ள தியாகி கல்யாணராமன் உதவி புரிந்தார்.

பிறகு கல்யாணராமன் உதவியுடன், மாறுவேடத்தில் சுலைமான் என்பவரின் வீட்டில் காமராஜர் 3 நாட்கள் மாறுவேடத்தில் தங்கி இருந்தார்.

நினைவு சின்னம்

காமராஜர் மாறுவேடத்தில் தங்கி இருந்த சுலைமான் என்பவரின் வீடு தற்போது ராணிப்பேட்டை நகராட்சி வளாகமாக உள்ளது.

காமராஜர் தங்கியிருந்த இடம் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து இருப்பதை சீரமைத்து நினைவுச்சின்னமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை அமைச்சர் காந்தி பரிசீலனை செய்து, சீரமைக்க உத்திரவிட்டார்.

அதன் அடிப்படையில் இன்று நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் தங்கி இருந்த வீட்டை புனரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு, சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்