ரூ.6 லட்சத்தில் கோமுட்டி குளம் சீரமைப்பு
ரூ.6 லட்சத்தில் கோமுட்டி குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
சோளிங்கர் அருகே கொடைக்கல் கிராமத்தில் உள்ள கோமுட்டி குளத்தை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூர்ணசந்தர் தலைமை தாங்கி, கோமுட்டிக்குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணி சீரிய முறையில் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஹேமாசந்திரன், ஒன்றிய பொருளாளர் புருஷோத்தமன், ஒன்றிய நிர்வாகிகள் தங்கதுரை, லோகநாதன், மணி, கவுன்சிலர் மதன்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.