சாலையோரங்களில் மின் கம்பிகளில் உரசிய மரக்கிளைகள் அகற்றம்
சாலையோரங்களில் மின் கம்பிகளில் உரசிய மரக்கிளைகள் அகற்றம் செய்யப்பட்டது.
புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை நெடுகிலும் உள்ள பல்வேறு வகையான மரங்களின் மரக்கிளைகள் மின் கம்பிகளில் படர்ந்துள்ளது. இதனால் அவ்வப்போது இப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் கம்பிகளில் படர்ந்துள்ள மற்றும் மோதி உள்ள மரக்கிளைகளை மின் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு மரக்கிளைகளை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் அறுத்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை ஓரங்களிலும் மரக்கிளைகளாக காட்சி அளித்து வருகிறது. அதை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மின் தடை ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.