அனுமதி இன்றி வைத்த விளம்பர பதாகைகள் அகற்றம்
நெல்லையில் அனுமதி இன்றி வைத்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் தண்டனை வழங்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விளம்பர பதாகைகள் தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றன. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், போர்டுகள் அப்புறப்படுத்தபட்டது. இந்த பணியினை தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மேற்கொண்டனர். நெல்லை மண்டல பகுதிகளில் அனுமதி பெறாத விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் என மொத்தம் 45 விளம்பர பதாகைகளை சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அகற்றினர்.