கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-04-02 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே கரடிசித்தூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியாப்பிள்ளை என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசனிடம் கூட்டுபட்டாவை தனி பட்டாக பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அந்த பணத்தை கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து லஞ்சப்பணத்தை பொன்னுசாமியிடம் வெங்கடேசன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்னுசாமியை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலருக்கு பொன்னுசாமி புரோக்கராக செயல்பட்டு லஞ்சம் வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியாப்பிள்ளையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பெரியாப்பிள்ளையை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்