புதர் செடிகள் அகற்றம்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டது.

Update: 2023-06-23 20:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலக கட்டிடத்தில் தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, இ-சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், தாசில்தார் அலுவலக வளாகம் முழுவதும் புதர் செடிகள், புற்கள் அதிகளவில் வளர்ந்து இருந்ததால் தெரு நாய்கள் வசிப்பிடமாக மாறி இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அலுவலக வளாகத்தில் வளர்ந்திருந்த புற்கள் மற்றும் செடிகளை எந்திரம் மூலம் வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்