பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆட்டுக்கொட்டகை அகற்றம்

பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆட்டுக்கொட்டகை அகற்றப்பட்டது.

Update: 2022-09-20 19:02 GMT

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி அரசகவுண்டனூரில் வசிக்கும் தனிநபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பொது இடங்களை ஆக்கிரமித்து அரசு வழங்கிய ஆட்டுக்கொட்டகையை அமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தாசில்தார் ராஜாமணி ஆலோசனையின்படி, ஒன்றிய ஆணையர் கிரிஸ்டி, தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செம்பியநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, தலைமை துணை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொது இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆட்டு கொட்டகையை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பாளர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்