சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பிரம்மதேசம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பிரம்மதேசம்
திண்டிவனம்- மரக்காணம் இரு வழி சாலையை ரூ.296 கோடியில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரக்காணம் அடுத்த சிறுவாடி மற்றும் முருக்கேரி கிராமத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலைத்துறையின் திண்டிவனம் உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் தீனதயாளன், மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.