சாலையோர புதர்கள் அகற்றம்

காட்டு யானை தாக்கி பெண் பலி எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.

Update: 2023-07-30 22:15 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் சுனிதா. இவரது மகள் அஸ்வதி. கடந்த 27-ந் தேதி 2 பேரும் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்த சென்ற போது, அருகில் இருந்த மூங்கில் காட்டுக்குள் இருந்த வந்த காட்டு யானை 2 பேரையும் தாக்கியது. இதில் தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பலனின்றி சுனிதா இறந்து விட்டார். இதற்கிடையே வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோரஞ்சால்-சப்பந்தோடு சாலையில் உள்ள மூங்கில்கள், புதர்களை அகற்ற வேண்டும், யானை தாக்கிய உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரஞ்சால்-சப்பந்தோடு சாலையோரம் உள்ள மூங்கில்கள், முட்புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்