நெல்லை மாநகரில் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி மெயின் ரோட்டில் உள்ள மண், தூசி கழிவுகள் மற்றும் சினிமா சுவரொட்டிகள் என அரசு அனுமதி பெறாமல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. வண்ணார்பேட்டை பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் சுவரொட்டிகளை அகற்றினர். இதேபோல் சாலைகளில் கிடந்த மண்ணையும் அப்புறப்படுத்தினர்.