எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2022-06-18 16:03 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா எஸ்.பி பட்டினத்தில் சாலை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்பேரில் தாசில்தார் செந்தில்வேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், நில அளவர் தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், எஸ்.பி.பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சுலைகாபீவி சகுபர்சாதிக் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்