ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை டவுனில் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்;

Update: 2022-06-10 22:07 GMT

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றி உள்ள 4 ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை உதவி ஆணையாளர் பைஜூ தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்