ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

மூங்கில்துறைப்பட்டு அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுப்பணித்துறை நடவடிக்கை

Update: 2023-02-14 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஈருடையாம்பட்டுமங்கலத்தில் பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான பிச்சகவுண்டன் ஏரி உள்ளது. 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு மழைக்காலங்கள் மட்டுமின்றி சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரானது வந்து நிரம்பும். இதன் மூலம் இப்பகுதி விவசாயிள் பாசனம் செய்து வந்தனர். ஆனால் ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூங்கில்துறைப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரி முருகேசன் தலைமையில் உதவியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரிைய ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள், வாழை மற்றும் தென்னை மரங்கள், வீடுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், பசலைராஜ், ஹரிதாஸ் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்