சின்னசேலம் அருகே வெட்டிபெருமாளகரம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

சின்னசேலம் அருகே வெட்டிபெருமாளகரம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-07-12 17:14 GMT


சின்னசேலம்,

சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வெட்டிபெருமாளகரம் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த ஏரி. இதில் சுமார் 20 ஏக்கரை 16-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்து மணிலா, மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். சிலர் வீடு கட்டியும் குடியிருந்து வருகின்றனர். இதனால் ஏரியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஷஇதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கினர். இதையடுத்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டெடுத்தனர்.

அப்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் பிரபு, நில அளவர் சபரி, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் அடுத்தகட்டமாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்