புதுக்கோட்டையில் பெண் போலீஸ் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்டவர் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியது தொடர்பாக ெபண் போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-10-13 18:54 GMT

வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி. கடந்த மாதம் 20-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் மாங்குடி வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்யப்பட்ட மாங்குடி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, லாட்டரி விற்பனை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாங்குடியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அவரது செல்போனுக்கு கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்த ராணி ரமாதேவி என்பவர் மாங்குடி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்த குறுந்தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இதைதொடர்ந்து மாங்குடி கொலை செய்யப்பட்ட மறுநாளே ராணி ரமாதேவி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் படி ராணி ரமாதேவியை பணியிடைநீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்