செயல் அலுவலர் பணியிடைநீக்கம்
குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலரை பணியிடைநீக்கம் செய்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டு உள்ளார்.
குடவாசல்:
குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலரை பணியிடைநீக்கம் செய்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டு உள்ளார்.
செயல் அலுவலர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் யசோதா(வயது54). இவர் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தாா். செயல் அலுவலர் யசோதா குடவாசல் பேரூராட்சியில் அரசு பணிகளை சரியாக செய்யாமல் மக்களுக்கு சென்று அடைய வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில் மெத்தனமாக செயல்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் யசோதாவை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.