கீழவெளியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தோகைமலை அருகே கீழவெளியூரில் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-08-14 18:39 GMT

போக்குவரத்து நெரிசல்

கரூர் மாவட்டம், தோகைமலை-திருச்சி நெடுஞ்சாலையில் கீழவெளியூர் அமைந்து உள்ளது. இந்த நெடுஞ்சாலை திருச்சி, கரூர் ஆகிய மாவட்ட பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதியாகவும், தோகைமலை, குளித்தலை ஆகிய ஒன்றியங்களின் குக்கிராமங்களை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது. இதனால் கீழவெளியூர் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் கீழவெளியூர் கடைவீதி அருகே அரசு பள்ளிகள், கோவில்கள் அமைந்து உள்ளது.

இந்தநிலையில் கீழவெளியூரில் கடைவீதியில் உள்ள நெடுஞ்சாலையை சிலர் ஆக்கிரமித்து கடையை கட்டி நடத்தி வந்தனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கீழவெளியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கீழவெளியூர் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தியது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று கீழவெளியூர் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கல்லடை ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், கல்லடை ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்