ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆவுடையார்கோவில் ஒன்றியம், கீழ்குடி கிராமத்தில் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், கருணாகரன், ஆவுடையார்கோவில் வருவாய் ஆய்வாளர், நாகுடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஊரணியை சுற்றி அளந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.