காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; பொதுமக்கள் சாலைமறியல்

காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-15 10:15 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் புத்தேரி தெருவில் குடியிருப்பு பகுதிகளையொட்டி சாலையில் ஷீட் அடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அலுவலர் ஜெயந்தி தலைமையில் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முறையாக நோட்டீஸ் வழங்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் எங்களின் உடைமைகளை சேதப்படுத்துகின்றனர்.

மறியல்

குடிநீர் குழாய் இணைப்பு, புதை வடிகால் இணைப்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சேதப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டி 20-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டதுடன், புத்தேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடியிருப்புவாசிகளுடன் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்