எறும்பூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எறும்பூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
வந்தவாசி
எறும்பூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் சுமார் 7 ஏக்கர் பரப்புள்ள பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் பாதுகாப்புடன், கோவிலூர் பாசனப் பிரிவு இளநிலைப் பொறியாளர் எஸ்.பரந்தாமன் தலைமையிலான குழுவினர் ஏரியில் ஆக்கிரமித்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.