ஆனைமலை
ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட குஞ்சுபாளையம் பிரிவு மீன்கரை சாலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி-கேரளா மற்றும் டாப்சிலிப், பரம்பிக்குளம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15 நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பயணிகள் நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டது.