தொண்டி
திருவாடானை தாலுகா குஞ்சங்குளம் ஊராட்சி திணைக்காத்தான் வயல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருவாடானை யூனியன் அலுவலகத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர்.