ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-01-04 19:45 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடங்களை ஆக்கிரப்பு செய்து வியாபாரம் செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால் நடைபாதைகளில் பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சூரமங்கலம் மண்டல வருவாய் உதவி அலுவலர் உமா மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார், சுகாதார ஆய்வாளர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அகற்றம்

அப்போது சில கடைகள் கூடுதலான இடங்களை ஆக்கிரமித்து கடைகளை ஆக்கிரமித்து அமைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கடைகளுக்கு வெளிப்பகுதிகளிலும் அதிகளவு பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அதிகாரிகள் அகற்றனர்.

மேலும் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் கடைகள் வைக்க வேண்டும் என்றும், மீறி ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பள்ளப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்