ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Update: 2022-11-16 19:45 GMT

தஞ்சை சிவகங்கை பூங்கர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே சாலையையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை போடப்பட்டு இருந்தது. 5 ஆண்டுகளுக்கு மேலாகஇந்த கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கான வாடகையும்செலுத்தி வந்துள்ளனர்.

தற்போது சாலையை அகலப்படுத்தும் நோக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். அதன்படி கடையின் உரிமையாளர் கடையை அகற்றினார். இந்த நிலையில் அதில் இருந்த கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லின் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர். மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் உதவி பொறியாளர் கண்ணதாசன், ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அருகில் இருந்த 2 கடைகளின் முன்பும் போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகளையும் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

வல்லம்

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் கடைவீதி வழியாக தான் தஞ்சை, திருச்சி மார்க்கத்தில் பஸ்கள் சென்று வருகின்றன. வல்லம் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட கடைவீதி - அண்ணாசிலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்து வந்தது. இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் தலைமையில் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

நேற்று வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், 7-வது வார்டு கவுன்சிலர் ரெளலத்நிஷா ஆகியோர் முன்னிலையில் கடைவீதி அண்ணா சிலை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், மளிகை கடை, ஓட்டல், காய்கறி கடை அகற்றப்பட்டது. வல்லம் கடைவீதி, மார்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்