அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.;

Update: 2023-09-28 19:11 GMT

கரூர் புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட திருச்சி நெடுஞ்சாலை அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 75 சென்ட் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை ஒப்படைக்குமாறு வருவாய் துறையினர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

நிலத்தை ஒப்படைக்காததால் கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு வேலை அமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்