கே.வி.குப்பம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
கே.வி.குப்பம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.;
கே.வி.குப்பம் தாலுகா, மாளியப்பட்டு ஊராட்சி, பள்ள கொல்லை கிராமத்தில் தனிநபர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இருந்து வந்தது. இதனால் நீண்ட நாட்களாக பஸ் போக்குவரத்து மற்றும் சாலை வசதி ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்தது.
இந்த நிலையில் தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தர், குறுவட்ட நில அளவர் ரம்யா, நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு, கட்டிட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதன்மூலம் அந்த வழியே பஸ் போக்குவரத்து செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.