புதுஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பாணாவரம் ஊராட்சியில் புதுஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2023-08-28 18:51 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் ஊராட்சியில் உள்ள சிறுபாசன புதுஏரி பகுதியில் தனிநபர்கள் சிலர் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் முஹம்மத் சையுப்தீன் முன்னிலையில் குறுவட்ட நில அளவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை கொண்டு நிலஅளவீடுகள் செய்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் பயிர் நடவு செய்திருந்ததால் அகற்றாமல் விட்டுவிட்டனர். இந்தநிலையில் பயிர் சாகுபடி முடிந்ததால் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி கால்வாய் அளவீடு செய்யும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் முஹம்மது சையுப்தீன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பாணாவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் ஏகநாதன், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் முரளி மனோகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்