கிடாரங்கொண்டான் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கிடாரங்கொண்டான் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவுபடி கிடாரங்கொண்டான் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சி வளத்தான்பட்டினம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கவுதமன். இவரது வீட்டிற்கு எதிரே குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் கவுதமன் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தரங்கம்பாடி வருவாய்த்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கொட்டகை அமைத்த கவுதமன், அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அகற்றம்
அதன்படி தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், கிடாரங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் நித்யாபாரத் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் சிறுவர்கள் விளையாட்டு மைதானம் கிடாரங்கொண்டான் ஊராட்சி வளத்தான்பட்டினம் என்று பெயர்பலகை வைக்கப்பட்டது.