சங்கராபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 14 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-23 18:45 GMT

சங்கராபுரம். 

சங்கராபுரம் அருகே உள்ள ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றன. அதன்பேரில் சங்கராபுரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்