சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Update: 2023-06-27 18:30 GMT

விழுப்புரம்

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறையினருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு அப்பகுதியில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் நேற்று சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளான காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கடைகளை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதி விசாலமாக காட்சியளித்தது. மீண்டும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்