ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்ட கொட்டகை அகற்றம்

ஆரணி அருகே ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்ட கொட்டகை அகற்றம்

Update: 2022-06-30 12:54 GMT

ஆரணி

ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் மட்டதாரி கூட்ரோடு அருகே ஆஞ்சநேயர் கோவிலையொட்டி பொதுப்பணித் துறைக்கு சம்பந்தப்பட்ட ஏரி கால்வாய் உள்ளது.

இந்த ஏரி கால்வாயின் மீது தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து ஒலைக்கொட்டகை போட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் க.பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று  ஆக்கிரமிப்பு செய்திருந்த ஓலைக் கொட்டகையை அகற்ற உத்தரவிட்டனர்.

அதன்பேரில் அந்த ஓலை கொட்டகை அகற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்