நடைபாதையில் அமைத்த நுழைவு வாயில் அகற்றம்

கோத்தகிரியில் பேரூராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் அமைத்த நுழைவு வாயில் அகற்றப்பட்டது.

Update: 2022-07-02 12:47 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் பேரூராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் அமைத்த நுழைவு வாயில் அகற்றப்பட்டது.

நுழைவு வாயில்

கோத்தகிரி அரசு கருவூலத்திற்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி காவலர் குடியிருப்பு, அரசு குடியிருப்புக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த நடைபாதையில் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டுச்செல்வதாகவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் கூறி அந்த நடைபாதையை தடுத்து, பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாத வகையில் சிலர் இரும்பு நுழைவு வாயில் அமைத்து விட்டதாக தெரிகிறது.

மகிழ்ச்சி

இதையடுத்து அந்த நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் நேற்று பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனுமதியின்றி பேரூராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைக்குரிய நுழைவு வாயிலை அகற்றினர். இதன் காரணமாக அவ்வழியாக நடந்து சென்று வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்