அரசு அதிகாரிகளின் பயண செலவுக்கான தடை நீக்கம் - தமிழக அரசு அரசாணை
அரசு அதிகாரிகளின் செலவினங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்த காலகட்டத்தில் நிதிச்சுமையை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 2020 மற்றும் 2021-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளுக்கான செலவை 50 சதவீத அளவிற்கு அரசு குறைத்தது.
அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினப்படி ஆகியவையும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு பணியாளர்களின் பொது மாறுதல் மற்றும் பயண செலவு ஆகியவற்றுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு செலவில் அதிகாரிகள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.