சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-14 06:21 GMT

சென்னை,

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது . ஆனால் சங்கத்தேர்தல் நடைபெற கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தேர்தல் நடத்த தடை விதித்து அப்போது தீர்ப்பு வெளியாகியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் ஐகோர்ட்டுவழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்