ஆற்றில் படர்ந்த ஆகாய தாமரைகள் அகற்றம்

ஆற்றில் படர்ந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டது

Update: 2022-08-18 18:21 GMT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் உள்ள வெண்ணாற்றில் ஆகாய தாமரைகள் அதிகளவில் வளர்ந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு படர்ந்திருந்தது. இதனால், விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் கரையோர பகுதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் ஆற்றில் தவறி விழுந்து செத்து மிதந்தன. இதனால், தண்ணீர் கடுமையான துர்நாற்றம் வீசியது. ஆகவே, ஆற்றில் படர்ந்த ஆகாயத் தாமரைகளை அகற்றி சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் வெண்ணாற்றில் படர்ந்த ஆகாய தாமரைகள் மற்றும் செத்து மிதந்த கால்நடைகளை அகற்ற ஊராட்சி தலைவர் சித்தரஞ்சனி நடவடிக்கை எடுத்தார். பின்னர் அவரது மேற்பார்வையில், ஆற்றில் படர்ந்த ஆகாய தாமரைகள் மற்றும் செத்து மிதந்த கால்நடைகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்