இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு (தொடக்க நிலை) குறைதீர் கற்பித்தல் பயிற்சி அனைத்து குறு வள மையத்திலும் நடைபெற்றது. பெரம்பலூர் வட்டார வள மையத்தில் நடந்த பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து தன்னார்வலர்களிடையே பேசினார். பின்னர் அவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சியானது அம்மாபாளையம், குரும்பலூர், சத்திரமனை, சிறுவாச்சூர், எசனை ஆகிய குறு வள மையங்களிலும் நடந்தது.