சமய நல்லிணக்க மாநாடு

புளியங்குடியில் சமய நல்லிணக்க மாநாடு நடந்தது

Update: 2022-11-13 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி மீராசா அலுஸ் சுன்னத் வல் ஜமாஅத் நகர ஜமாஅத்துல் உலமா சபை, நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய மீலாது விழா சமய நல்லிணக்க மாநாடு புளியங்குடி காயிதேமில்லத் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஜமாஅத் கமிட்டி தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன், முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் வகாப், செயலாளர் ஹபிபுல்லா‌ஹ், பொருளாளர் முகம்மது சுலைமான், மேலப்பள்ளிவாசல் துணைத்தலைவர் முகம்மது பாவா, செயலாளர் முகம்மது இப்ராஹிம், நகரசபை கவுன்சிலர்கள் சேக் காதர் மைதீன், முகம்மது நயினார், கீழ பள்ளிவாசல் உதவி தலைவர் அப்துல் ஜப்பார், தி.மு.க. நகர செயலாளர் அந்தோணி சாமி, காங்கிரஸ் நகர தலைவர் பால்ராஜ், ம.தி.மு.க. நகர செயலாளர் ஜாஹிர் உசேன், வர்த்தக சங்க நகர தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் சங்கர பாண்டியன், முன்னாள் நகரசபை துணை தலைவர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அப்துல் வகாப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்எல்.ஏ., ஜமாஅத் துல் உலமா சபை மாநில துணை செயலாளர் கா.மு.இல்யாஸ் ரியாஜி, சாமிதோப்பு ஆதினம் பாலபிரஜாபதி அடிகளார், ஆவுடையனூர் பங்குத்தந்தை மோயீசன், புளியங்குடி பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகள், நகரசபை தலைவர் விஜயா சவுந்தர பாண்டியன், நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் கலீல் ரகுமான் ஆலிம், நசீர் அஹமது ஆலிம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வேலு, முகம்மது புகாரி ஆலிம், முகம்மது இப்ராஹிம் ஆலிம் ஆகியோர் பேசினார்கள்.

மாநாட்டில் முஸ்லிம் யூத் லீக் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தி.மு.க. நகர அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்