தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை சார்பில் மிலாது நபியையொட்டி சமய நல்லிணக்க மாநாடு பாளையங்கோட்டையில் நடந்தது. தலைவர் கோதர்மைதீன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மீரா மைதீன், நெல்லை அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் வரவேற்று பேசினார். செய்யது முகமது கிரா அத் ஓதினார்.
தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, பாலபிரஜாபதி அடிகள், ஜெகத் கஸ்பர்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சமய நல்லிணக்கம் குறித்து பேசினார்கள்.
மாநாட்டில் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் அப்துல் ரஹீம், இணைச்செயலாளர் முகமது இலியாஸ், மாவட்ட செயலாளர் ஜலில் அகமது, முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் எம்.கே.எம்.முகமது ஷாபி, அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் செய்யது அகமது, பாட்டபத்து முகமது அலி, நயினா முகமது கடாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.