பணியின்போது உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு உதவித்தொகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் வழங்கினார்

பணியின்போது உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு உதவித்தொகையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் வழங்கினார்.

Update: 2022-10-13 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் முருகையன். இவர் கடந்த 10-6-2022 அன்று பணியில் இருந்த போது, மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடன் 1997-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த 2-வது பேட்ச் காவலர்கள் குழுமம் ஒன்று சேர்ந்து முருகையன் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்தனர். அதன்படி போலீஸ்காரர்கள் திரட்டிய ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் கலந்து கொண்டு பணியின் போது உயிரிழந்த முருகையன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சத்து 90 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீசார் பச்சையம்மாள், தினேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்